சர்வதேச சிறுவர் தினம்

Posted on

முன்பள்ளி சிறுவர் விளையாட்டு விழா – 2011

யாழ்ப்பாணத்தில் நாவாந்துறைப் பகுதியில் அமைந்துள்ள புனித நீக்கிலார் முன்பள்ளி நிறார்களுடைய விழையாட்டு விழா 08.07.2011 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொதுவாக வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரினால் குடும்பங்கள் சின்னாபின்னமாகி, பெற்பெற்றோரை இழந்து அகதிகளாக, அனாதைகளாக மீண்டும் வாழ்வோம் என்ற மன உறுதியோடு எமது தாயகத்தில் நிறைவான நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள்.
நடத்தியவர்கள் புனித நீக்கிலார் முன்பள்ளி சிறார்கள். மக்கள் மனதில் எவ்வித பாதிப்புக்கள் இருந்த போதிலும் இவ்வாறான மனதுக்கு மகிழ்வட்டும் நிகழ்வினால் பாதிக்கப்பட்ட சிறார்கள் மட்டுமல்ல பெற்றோரும் மகிழ்ச்சி அடைகின்றனர். த்றபோதெல்லாம் சிறுவர் துஸ்பிரயோகம், பாடசாலையிலிருந்து சிறுவர்கள் இடைவிலகல், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் பற்றி அதிகமாக பேசுகின்றோமே தவிர சிறுவர்களை மகிழ்விற்பதற்கான நிகழ்வை நடத்துவதைப் பற்றி பேசுவதை மறந்து விடுகின்றோம்.
நிறுவர்களுடைய மகிழ்வான வாழ்க்கை பற்றி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். அவர்களின் மனங்களைக் குளிர வைக்கும் மகிழ்களங்களை அமைத்துக் கொடுக்கவும் பல விளையாட்டு விழாக்கள், கலை நிகழ்வுகள், சிறுவர் கொண்டாட்டங்கள், வேடிக்கை விநோத நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி அவர்களின் மனங்களை மகிழ்விக்கக் கூடிய வகையில் உற்சாகப்படுத்தவும், உத்வேகத்துடன் செயலாற்றும் செயற்பாடுகளை ஊக்குவிக்கவும் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.
சிறுவர்களின் வாழ்வை மகிழ்ச்சியான களமாக மாற்றியமைப்பது நம் எல்லோரினதும் கடமையாகும். அவர்களுக்கான மகிழ்களத்தை அமைத்துக் கொடுப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் பேருதவியாகும். இன்றைய சிறுவர்களை நாளைய தலைவர்களாக மாற்றிமைக்கக் கூடிய சக்தியாக நாம் எல்லோரும் முன்னின்று ஓர் உந்து கோலாகச் செயற்பட வேண்டுமென  இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக் கலந்து கொண்ட மகளிர் அபிவிருத்தி நிலையப் பணிப்பார் சரோஜா சிவசந்திரன் தெரிவித்தார்.

Leave a Reply