மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் வன்னிக்ககான விஸ்தரிக்கப்படட் சேவை

Posted on

வன்னி மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் மீள் குடியேறிய குடும்பங்களையும் குறிப்பாக பாதிக்கப்பட்ட, இடம் பெயர்ந்த பெண்களையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகளையும் அறிந்து கொள்ளும் முகமாக மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் சரோஜா சிவச்சந்திரன் மற்றும்  அந்நிலையத்தின் திட்ட அலுவலர்கள் மார்ச் 18,19,20 ம் திகதிகளில் மாங்குளம் கிளிநொச்சிப் பிரதேசங்களுக்குச் சென்றிருந்தனர்.



இவர்களோடு கலந்துரையாடுவதற்காக மாங்குளம், ஒலுமடு, அம்பலகாமம், புளுமஞ்சிநாதகுளம், பனிக்கம்குளம், வன்னிவளான் குளம், குஞ்சிக்குளம், கொள்ளர்குழியம் குளம், வன்னிவிளான் குளம், குஞ்சிக்குளம், கொள்ளர்குழியம்குளம் ஆகிய பகுதிகளிலிருந்து வருகை தந்த யுகச்தி மகளிர் சம்மேளன அங்கத்தவர்களும் கோணாவில் பரந்தன், விவேகானந்தர் தெரு, மளையாளபுரம், சுதந்திரபுரம், ஊற்றுப்புலம், உடையார்கட்டு, கிளிநொச்சிப் பிரதேசங்கிளிலிருந்து வருகை தந்த மகா சக்தி மகளிர் சம்மேளன அங்கத்தவர்களோடும் அவர்களது பிவரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

அரசாங்கத்தின் மனைப் பொருளியல் வீட்டுத் திட்ட ஊக்குவிப்புச் செயற்பாட்டுக்கேற்ப மகளிர் அபிவிருத்தி நிலையம் இவ்வாறு வருகை தந்த பெண்களுக்கு 50,000.00 ரூபா பெறுமதியான வீட்டுத் தோட்டச் செய்கைக்கான மரக்கறி விதைகளை வழங்கியது.
பெண்களின் முக்கிய பிரச்சினைகளாக பாதுகாப்பான வீடு ஒன்றைப் பெற்றுக் கொள்வது எல்லோருக்கும் முக்கியமான பிரச்சினையாகக் காணப்படுகின்றது. தற்காலிகமாக வழங்கப்பட்ட வீடுகள் கதவுகள் இன்மையால் பெண்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது. ஆகவே வீட்டுத் திட்டத்திற்காக வழங்கப்படும் நிதி போதுமானதாக இல்லை. வீடகளைக் கட்டி முடிப்பதற்கு சில குடும்பங்கள் நகைகளை விற்று மற்றும் கடனுதவிகளைப் பெற்று பாதுகாப்பான வீடுகளை அமைக்க முற்படுகின்றனர். இதனால் அவர்கள் தொடர்ந்தும் கடனாளிகளாக இருப்பதல் வாழ்வாதாரத்திற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதில் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
மலசலகூடங்கள் கதவுகள் அற்ற நிலையிலும், கிணறுகள் கட்டுக்கள் அற்ற நிலையிலும் இருப்பதால் எந்நேரமும் அபாயத்ததை எதிர் நோக்குபவர்களாக இருக்கின்றனர். ஏ9 பாதையயை அண்டியபிரதேசங்களில் வசிக்கும் பெரும்பாலானோர் வீடுகளுக்கு யன்னல்கள், கதவுகள் இல்லாத காரணத்தால் வகனங்களால் கிளப்பப்படும் தூசிகளினால் இருமல், தும்மல், சளி போன்ற நோய்களால் துன்பப்படுவதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
பல குடும்பங்களில் உள்ளோர் பல ஏக்கர் காணிகளை போரின் முன்பு தமக்கு சொந்தமாக வைத்திருந்த போதிலும் தற்போது அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் தமக்கு 1/2ஏக்கர் காணிகளே பகிர்ந்தளிக்கப்பட்டதாக வருத்தம் தெரிவித்தனர். முன்பு பரந்தளவில் நெல், சிறுதானியங்கள், மற்றும் பண்ணை போன்றவற்றைப் பராமரித்து வந்த மக்கள் இடவசதி இன்மையால் அவற்றை மீண்டும் செய்ய முடியாத நிலையில் உள்ளதாகத் தெரிவித்தனர். மேலும் காணிகளுக்குப் பாதுகாப்பான வேலிகள் எதுவும் இல்லை, வளர்ந்து வரும் பற்றைகளால் விசயந்துகளின்  தொல்லைகள் அதிகரித்துள்ளதோடு பாம்புக் கடியினால் பலர் இறந்தும் உள்ளனர். பாதுகாப்பற்ற வீகளுக்குள் மிருகங்களோ, பாம்புகளோ இலகுவில் புகுந்துவட முடியும். துப்பரவு செய்யப்படாத பற்றைகளினால் நுளம்புகள் அதிகரித்துள்ளதோடு மக்கள் டெங்கு போன்ற நோய்களுக்குள்ளாவதை அவதானிக்க முடிந்தது.
மாங்குளம் ஆதார வைத்திய சாலைக்கு மிகத் தூர இடங்களில் இருந்து செல்லும் மக்கள் அங்கு போதிய வைத்தியர்கள் இன்மையால் கஸ்டங்களை அனுபவிக்கின்றனர். நோயாளர்களுக்குரிய மருந்து விற்பனை நிலையங்கள் அரிதாகவே  உள்ளது. ஆயுள்வேத வைத்திய முறைகளும் இன்னும் விஸ்தரிக்கப்படவில்லை. சிறுவர்கள் போசாக்கற்றவர்களாகக் காணப்படுவதை அவதானிக்க முடிந்தது.
பாடசாலைக்குச் செல்லும் மாணவர்கள் மிகத் தூர இடங்களிலிருந்து வருவதனால் பாசாலை வரவில் வீழ்ச்சி அடைவதோடு, யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தரும் ஆசிரியர்களின் வரவிலும் விழ்ச்சி காணப்படுவதை அவதானிக் முடிந்தது.
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா செல்லும் பேரூந்துகளில் கிளிநொச்சியிலிருந்து மாணவர்களை ஏற்றிச் செல்வதில்லை. இதனால் ஒழுங்கான போக்குவரத்தின்மையால் குறித்த நேரத்திற்கு மாணவர்கள் காடசாலைக்குச் செல்ல முடியாதுள்ளனர். மாணவர்கள் ஏனைய பிரயாணிகளுடன் நெருக்கமாகப் பிரயாணம் செய்வதனால் மாணவிகள் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாவதாகவும் டிதெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான சம்பவங்கள் பல இம் மகளிர் சம்மேளனங்களுக்கு அடிக்கடி வருவதாகத் தெரிவித்தனர்
.

சந்தைவாய்ப்பு வசதிகளுக்காக பல மைல் தூரம் செல்ல வேண்டியிருப்பதனால் பெண்களின் பெண்களின் வியாபாரச் செயற்காடுகள் பல முடக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியமான  உணவைப் பெற்றுக் கொள்ளும் வசதிகள் கூட இவர்களுக்கு அங்கு காணப்படவில்லை. வீட்டுத் தோட்டத்தில் ஈடுபடுவதற்கு நீர் பிரச்சினையாக உள்ளது.



அனேகமான  குடும்பங்களில் ஊனமுற்றவர்களும், மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களும் தகுந்த பராமரிப்பின்றி வாழ்ந்து வருவதை அவதானிக்க முடிந்தது. மன அழுத்தத்தினால் பாதிப்படைந்தவர்களுக்கு நிறுவனங்களினால் உளவள ஆலோசனை வழங்கப்பட்ட போதிலும் அவை போதியதாக இல்லை. ஊனமுற்றவர்களில் பலர் இன்னும் காயம் மாறாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களைப் பராமரிப்பதிலோ,வைத்திஙசாலைக்கு எடுத்துச் செல்வதிலோ பல தடங்கல் காணப்படுகின்றது.மேலும் தடுப்புமுகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட பல பெண்கள் வெளியில் செல்ல முடியாதவர்களாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் காணப்படுகின்றனர். இவர்கள் சமூகத்தில் உள்வாங்கப்படுவற்கு பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளது.

Leave a Reply