வடமாகாணத் தோ்தலும் பெண்களின் பங்களிப்பும்

Posted on

யாழ்.குடாநாட்டில் பெண்களின் அரசியல் பங்களிப்பு என்பது காலத்தின் தேவையாகவுள்ளது. அதுவும் தமிழ் பெண்கள் சமூகத்தில் பொது மக்களுடன் தொடர்பு கொள்வது என்பது பெரிய விடயமாகும். பெண்களுக்கு வாக்குரிமை மட்டுமே என்ற நிலைப்பாட்டிலிருந்து பெண்களும் அரசியல் செயல்பாடுகளில் முன்னேற முடியும் என்பதற்கு ஓர் எடு்த்துக் காட்டாக 3ஆம் உலக நாடுகளிலேயே முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு முதல் பெண் பிரதமரைக் கொண்ட நாடு என்று பெருமைப்படும் அளவிற்கு ஏனைய பெண்கள் முன்னேறவில்லை.
சமூக சிந்தனையை பெண்கள் ஏற்படுத்திக் கொள்வதே பெரும் சிரமாமாக இருக்கும். பாரம்பரியத்திலிருந்து வந்த நாம் இன்று பல்வேறு துறைகளில் முன்னோடியாக பெண்களைக் கொண்டிருக்கின்றோம். பெண் தலைமைத்துவ குடும்ப மரபை தற்போதைய சூழ்நிலையில் நாம் பெருமளவில் கொண்டிருக்கின்றோம். ஆனால் அரசியல் பிரவேசங்களில் பெண்களின் பங்கு மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.
இந்த நிலையில் அரசியல் துறையில் பெண்கள் ஆர்வம் கொண்டு தம்மை இணைத்துக் கொள்வது பல யதார்த்தங்களை வெளிக் கொணர உதவும் அதிலும் பெண் பற்றிய அக்கறை கொண்ட பெண்களால்த் தான் இத்தகைய ஓர் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும். இன்றைய சூழலில் அரசியலில் பெண்கள் முழு வீச்சில் ஈடுபடாமைக்கு போதிய ஆளணி ப்றறாக்குறை, தகுந்த பாதுகாப்பின்மை, முடிவெடுக்கும் தகுதியை பெற்ற பெண்களின் வீத அதிகரிப்பின்மை போன்றனவும் சில காரணிகளாகும். பெண்கள் சமூகத்தின் முக்கிய பங்காளிகள் என்பது எல்லா விதத்திலும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். சமூக யதார்த்தத்திலிருந்து பல்வேறு கோணங்களில் பெண்களின் பிரச்சினைகள் அணுகப்பட்டு ஆழமான சிந்தனையில் வழமான பெண்கள் சமுதாயத்தை எதிர் பார்த்து கட்டமைக்கப்படுவது அல்லது முன்வைக்கப்படுவது அவசியமாகும். பெண்களின் அரசியல் பிரவேசம் காலத்தின் தேவையாகக் கருதப்படுகிறது. தற்போதைய சூழ்நிலைகளில் உள்ளுராட்சி தேர்தலி்ன் போது பெண் வேட்பாளர்களின் பங்களிப்பு விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும். யுத்தத்தின் பின்னரான குடாநாட்டின் பின்ணணியில் பெண் தலைமைத்துவம் அதிகரித்துள்ள நிலைகளில் இவர்களின் சுகாதாரம், போசாக்கு உரிமைகள், வாழ்வாதார அடிப்படைப் பிரச்சினை போன்றவற்றையும் கவனிக்கப்பட வேண்டியவையே. மாறும் சூழ்நிலைகளில் மனிதாபிமானத் தேவைகளை எதிர் கொள்ளவும் மூன்று நகரசபைக்கான 29 வேட்பாளர் தெரிவுக்கும், 16 பிரதேச சபைக்கான 210 வேட்பாளர் தெரிவுக்கும் பெண் வேட்பாளர்களின் பங்களிப்பு  அதிக பட்சம் 3.2 விகிதமாக இருந்தால் பெண்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அமையும்.
நடைபெறவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தலில் பெண் வேட்பாளர்கள் தாம் தெரிவு செய்யும் அரசியல் கட்சிகளில் போட்டியிடுவதற்கான தகுதியை உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள் கூடிய எண்ணிக்கையில் போட்டியிடுவார்களானால் புதியதோர் இலக்கை அடைய முடியும். கட்சிகள் பெண் வேட்பாளர்களைச் சேர்த்துக் கொள்ளாதவிடத்து பெண்கள் அக்கட்சிகளுக்கு வாக்களிப்பது அர்த்தமற்றதாகிவிடும். எமது பிரதேசத்திற்கு இன்றைய சூழலில் பெண்கள் தொடர்பான சகல பிரச்சினைகளையும் திட்டவாக்கல் கொள்கை அடிப்படையில் விரிவாக்கம் செய்வதற்கு பெண்களால் மட்டுமே முடியும் எனவே அரசியலில் நுழைவதற்கான சந்தர்ப்பத்தைப் பெண்கள் தவறாது பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

Leave a Reply