Uncategorized

Posted on

பற்றிக் பிறின்டிங் பயிற்சி

மகளிர் அபிவிருத்தி நிலையம் வேலணை பிரதேச செயலகத்திற்குட்ட இளம் பெண்களுக்கு சுயதொழில் பயிற்சி வழங்கும் நோக்கத்திற்காக வருடந்தோறும் இத்திட்டத்தை செய்து வருகின்றது.

Posted on

மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்பட்ட பெண்களுக்கான கருத்தரங்குகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டத்தின் கீழ் மகளிர் அபிவிருத்தி நிலையம் கிராம மட்ட பெண்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்துடன்

  • வன்முறையற்ற தொடர்பாடல்
  • சமூகத்திற்கும் சமூக அமைப்புகளுக்கும் இடையேயான உறவினை மீள்கட்டியெழுப்புதல்
  • பாதிக்கப்பட்ட பெண்களுக்கான சட்ட ஆலோனைகள்
  • பெண்களின் சமாதானம்,பாதுகாப்பு சம்பந்தமான UNSCR 1325 தீா்மானம்
  • போருக்கு பின் சமாதானத்தை கட்டியொழுப்புவதில் பெண்களின் பங்களிப்பு  போன்ற கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.

.

International children day 2012

Posted on

சா்வதேச சிறுவா் தினம் 2012
சா்வதேச சிறுவா் தினத்தன்று சங்கானை, சண்டிலிப்பாய், உடுவில், தெல்லிப்பளை ,யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலகத்தினூடாக தெரிவு செய்யப்பட்ட மாணவா்களுக்கு புத்தகபை, கற்றல் உபகரணங்கள் என்பன வழங்கப்பட்டதோடு எமது பணிப்பாளா் சறோஐா சிவசந்திரனால் எழுதிய”சிறுவா் உரிமைகள்” எனும் கைநூல் மக்கள்வங்கி பிராந்திய முகாமையாளா் திரு .எஸ்.பத்மநாதன் அவா்களால் வெளியிட்டு வைக்கப்பட்டது.

தேசிய பிரச்சினையாக வளர்ந்துவரும் வன்புணர்வு சம்பவங்கள்

Posted on

இரண்டாயிரமாம் ஆண்டின்அபிவிருத்தி இலக்குகள் நிறைவடையூம் 2015ஆம் ஆண்டளவில் சுகாதாரமட்டத்தில் மேலதிகமுன்னேற்றத்தை அடைவதற்காக பல அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வரும் காலகட்டத்தில் எமது நாட்டில் கருக்கலைப்புஇ இளவயது கர்ப்பம்இ சிறுவர் துஷ்பிரயோகம்இ பெண்கள் வன்புனர்வூ என நடைபெறும் சம்பவங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரதொவித்திருப்பதுபோல இதிலாவதுமுதலிடத்தைபெற்றுவிடமுயற்சிக்கிறௌமோஎனஎண்ணத்தோன்றுகின்றது. ஐ.நா பாதுகாப்புசபையின் 1325 தீர்மானத்தின் பிரகாரம் போர்நடக்கும் காலங்களிலும் போர் நடைபெற்று முடிந்த பின்னய காலகட்டங்களிலும் பெண்கள்இ சிறுவHகளுக்கு தகுந்த பாதுகாப்பளித்தல் வேண்டும் என்று பாpந்துரைத்துள்ளது. இப் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு அப்பால் போH நடந்து முடிந்த பிரதேசங்களில் பெண்களுக்கும் சிறுவHகளுக்கும் இப்பாதுகாப்பு சாpயாக கிடைக்கவில்லை என்பதற்கு நாளாந்தம் இடம் பெற்று வரும் துஷ்பிரயோக சம்பவங்கள் எடுத்துக்காட்டாக அமைகின்றது. சுமாH 20இ000 சிறுவH துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டிருப்பதாக தரவூகள் காட்டுகின்றன. சிறுவH துஷ்பிரயோகம்இபெண்கள் வன்புணHவூஎன்பனசாதாரணநிகழ்வூகளாகஎமதுசமூகத்தில் பேசப்பட்டுவருவதுதுன்பகரமானதே. சிறுவHஅபிவிருத்திமற்றும் மகளிர்விவகாரஅமைச்சர்திஸ்ஸ கரலியத்ததொலைக்காட்சி நாடகங்களின் தாக்கத்தை காரணமாக காட்டியூள்ளார். ஆயினும் பெண்கள் தான் தொலைக்காட்சி நாடகங்களை தொடர்ந்து பார்க்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டிற்கு அப்பால் இந்த நாடகங்களை பார்க்காத ஆண்கள் இதனால் எப்படி பாதிக்கப்படுகின்றார்கள் என்ற ஒர் கேள்வியூம் எழுவது நியாயமானதே. சம்பவங்களுக்கு காரணங்களை தேடி அலையாது சம்பவங்களுக்கு காரணமானவர்கட்கு சாpயான தண்டனைகளை துhpதப்படுத்துவதற்கான முயற்சிகளை எப்படி மேற்கொள்ளலாம் என்பதை கவனத்தில் கொள்வது அவசியம். பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா அவர்கள் தொpவித்திருப்பதுபோலசட்டங்களஇ; தண்டனைகள்கடினமாக்கப்படவேண்டும் என்பது வரவேற்கத்தக்கதே. அதற்கானநடவடிக்கைகளைமகளிh; அமைச்சுஆரம்பித்திருப்பதும் வரவேற்கத்தக்கதே. மகளிர்; அமைப்புக்களின்நடவடிக்கைகள் பாலியல் வன்முறைகெதிரான குழுஇ மகளிh;க்கான உளவள ஆலோசனைகள் யாவூமே பெண்களை மட்டுமே இலக்காக கொண்டு செயற்படுவதன் காரணத்தினால்இ ஆண்கள் இவை எல்லாமே தமக்கு எதிரானவை நாம் நாமாகவே இருப்போம் என்ற இறுமாப்பில் காhpயங்களை நகா;த்துகின்றனா;. பெண்கள் இன்று வல்லமை பொருந்திய ஆளுமையூடையவா;களாக தம்மை பாதுகாக்கும் தைரியமுடையவா;களாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில்இ அவா;களை இலகுவாக தம்வசப்படுத்தமுடியாத நிலையில் இன்று அப்பாவி பெண்கள்இபால்குடி மாறாத 3வயதுஇ4வயது குழந்தைகளை தமது காமப்பசிக்கு இலக்காக்கும் காமுகா;களை எமது சமூகம் உள்வாங்கியிருக்கின்றதே!அதற்கு நாம் என்ன பதில் கூறப்போகின்றௌம்.கொழும்புத்துறையில் மிக அண்மையில் நான்கு வயதே நிரம்பிய சிறுமியை 40 வயது காமுகன் வன்புணா;விற்கு உட்படுத்தியது பெண்களைப் பெற்ற தாயூள்ளங்களை கொதிப்படைய செய்துள்ளது. அரசியல்வாதிகளோ இன்றுபடையணிகள் பின்தொடர உச்ச பாதுகாப்பில் வலம்வருகின்றனா;.ஆனால் புள்ளியிட்டுஅவா;களைஅhpயாசனத்திற்குஏற்றியபெண்கள் தமதுகுடும்பத்தில் சிறுமியரையூம் தம்மையூம் பாதுகாக்க முடியாது தத்தளிக்கின்றனா;. ஓh; சமூகத்தில் பெண்களும் சிறுவரும் ஆரோக்கியமாக வாழும்போதே சமூகம் பூரணப்படுத்தப்பட்ட சமூகம் என நாம் கூறமுடியூம்.

போhpன் பின்னரானமீள்குடியேற்றம் நல்லிணக்கம் என்பனபெண்களையூம் சிறுவரையூம் ஒன்றிணைத்த செயலாக்கமாகவேஅமையவேண்டும். பாதுகாப்பற்ற ஓh; சமூக அமைப்பை மீள் உருவாக்கம் செய்வதில் மீண்டும் மீண்டும் பல பிரச்சிரனைகளை உள்வாங்க வேண்டிய சந்தா;ப்பங்களே அதிகம். பத்திhpகைகளில் வெளிவரும் பாலியல் வன்புணா;வூ குற்றங்களை தினமும் பாh;க்கும் போது இவை செய்திகளாக மட்டும் பாh;க்காது ஒவ்வொரு பெற்றௌரும் தமது பிள்ளைகள் பற்றி அச்சம் கொள்ள வேண்டிய நிலையே ஏற்படுகின்றது. பெண்பிள்ளைகட்கு பெற்றௌரே பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலையில் அவா;களது ஏனைய செயற்பாடுகள் கேள்விக் குறியாகஇ பெண்பிள்ளைகள் தனித்து வீட்டில் கூட விட்டு விட்டு வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பாலியல் குற்றங்கட்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும் என்பதற்கு அப்பால் குற்றச் செயல்களை விரைவாக ஆராய்ந்து அதற்குhpய நீதியான தண்டனை வழங்கினாலே பெரும்பாலான குற்றங்கள் குறைவதற்கு வாய்ப்புண்டு காவல் நிலையங்களில் உருவாக்கப்பட்டிருக்கும் பெண்பொலிஸ் பிhpவினா; கூட உசாh;படுத்தப்பட்ட நிலையில் அவா;களுக்கு உடனுக்குடன் சென்று விசாhpக்கக் கூடிய வகையில் போக்குவரத்து மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும். தற்போது நடைமுறையிலுள்ள சட்டங்களை சாpயாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் பாலியல் குற்றங்களில் ஓரளவாவது குறைப்பதற்கு முடியூம். பெண்கள் சமூகத்தில் தம்மை ஆளுமை மிக்கவா;களாகவூம்இ தன்னம்பிக்கை மிக்கவா;களாகவூம் உருவாக்கிக் கொள்வதன் மூலம் தம்மையூம்இ தமது சந்ததியினரையூம் இவ்வாறான துன்பகரமான சம்பங்கள் இடம்பெறாமல் காப்பாற்ற முடியூம.; சமூகம் சீரழிகின்றது என்று கூறும் போது சமூகத்தில் நாமும் ஒருவா; என்பதை நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

நெடுந்தீவுப் பிரதேசத்தில் மகளிர் அபிவிருத்தி நிலையம் ஆற்றிவரும் சேவைகள்

Posted on

சமுதாயத்தில் பெண்கள் எதிh;கொள்ளும் பாலியல் ரீதியான வன்முறைகளை ஒழிப்பதற்கு அவா;கள் சமுதாயத்தில் ஆளுமை உடையவா;களாக தம்மை வலுப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது. இதனடிப்படையில் மகளிh; அபிவிருத்தி நிலையம் பெண்களுக்கான பல செயற்பாடுகளை நிறைவேற்றி வருகின்றது. இவற்றில் ஒரு கட்டமாக தேசிய மொழிகள் மற்றும்இ சமூக ஒருமைப்பாட்டு அமைச்சுஇ ஐ.நா அபிவிருத்தித் திட்டம் ஆகியவற்றின் அனுசரணையூடன் நெடுந்தீவூப் பிரதேசத்தில் பெண்களுக்கான ஓh; செயற்பாட்டுத் திட்டத்தை மகளிh; அபிவிருத்தி நிலையம் இவ்வாண்டு ஆரம்பித்து செயற்படுத்தி வருகின்றது.

நெடுந்தீவூ தனிப்பட்ட ஓh; தீவாக பல அபிவிருத்தியின் பின்னடைவூகளை சந்தித்த போதிலும் குடாநாட்டின் பொருளாதார சமூக இணைவூகளுடன் தொடா;புகளை பேணி வருகின்றது. ஆயினும் இங்கு வாழும் பெண்களது சமூக இணைவூ ஒடுக்கப்பட்டதாகவூம் பின்தங்கிய நிலையிலும் காணப்படுவது குறைபாடே.
மகளிh; அபிவிருத்தி நிலையத்தின் செயற்பாடுஇ கடல்கடந்து இப்பிரதேச மக்களை குறிப்பாக பெண்களை அணுகியிருப்பதுஇ அவா;களது வாழ்வியலில்  சமூக மட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துமென  எதிh;பாh;க்கப்படுகின்றது. இப் பிரதேச மக்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பல நிகழ்ச்சித் திட்டங்கள் பல கட்டங்களில் இங்குள்ள பெண்களுக்காக நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதற்கட்டமாக பாலியல் பலாத்காரங்களிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இவை தொடா;பான சட்டங்களை அவா;கள் அறிந்திருத்தல் அவசியம். ஆகவே வீட்டு வன்முறை தொடா;பான சட்ட விளக்கங்களை அங்குள்ள தெரிவூ செய்யப்பட்ட பெண்கள்இ ஆண்கள்இ மாணவா;கள்இ ஆசிரியா;கள்இ பிரதேசசெயலக அலுவலா;கள் ஆகியோருக்கு வழங்குவதற்காக ஓh; தொடா; விளக்கக் கருத்தரங்குகள் நடத்தப்பட்டன.
இவ்வாறான ஒவ்வோh; நிகழ்விலும் ஒவ்வொரு 10 போ; கொண்ட நான்கு பெண்கள் குழுக்கள் தெரிவூ செய்யப்பட்டு அவா;கள் மேற்கொண்டு எடுக்க வேண்டிய செயற்பாடுகள் விரிவாக அவா;களுக்குக் கூறப்பட்டன.
நெடுந்தீவிலிருந்து இந்தியாவிற்கு வள்ளங்களில் செல்லக் கூடிய இலகுவான வாய்ப்புக்கள் காணப்பட்டதன் காரணமாக  யூத்த காலங்களில் இத்தீவிலிருந்து இடம்பெயா;ந்த பல குடும்பங்கள் இந்தியாவிற்குச் சென்றிருந்தன. இன்றைய காலகட்டத்தில் இந்தியாவிலிருந்து பல குடும்பங்கள் இலங்கைக்குத் திரும்பி வந்துள்ளதனால் பெரும்பாலான குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடமான நெடுந்தீவூக்கு வந்துள்ளமை அவதானிக்க முடிந்தது.
இச் செயற்பாடுகளோடு பாதிக்கப்பட்ட மக்கள் பலருக்கு உள வள ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டிய தேவையூம் இங்கு இனங்காணப்பட்டுள்ள நிலையில் மகளிh; அபிவிருத்தி நிலையம் ஜுன் 29ம் திகதி ஒH உளவள ஆலோசனைக் கருத்தரங்கை நெடுந்தீவூ பிரதேச செயலகத்தில் தெரிவூ செய்யப்பட்ட பெண்களுக்காக நடத்தியது. இக் கருத்தரங்கை நடத்துவதற்கு யாழ்ப்பாணத்திலிருந்து உளவள ஆலோசகா; வருகை தந்து ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டதோடு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் ஒவ்வொரு கிராமசேவையாளா; பிரிவிற்கும் வருகை தந்து சேவையில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளையூம் மேற்கொண்டுள்ளது. உளவள சேவையில் மேலதிக கவனத் தேவைப்பாடுடையவா;கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றமையூம் குறிப்பிடத்தக்கது.
மேலும் பிரதான செயற்பாடாக ஜுலை 11ம் திகதி இலவச சட்ட ஆலோசனை முகாம் ஒன்று மகளிh; அபிவிருத்தி நிலையத்தினால் ஒழுங்கு செய்து நடத்தப்பட்டுள்ளது. இச் சட்ட சேவை முகாமில் பங்கு கொள்வதற்காக யாழ்.குடாநாட்டிலிருந்து நான்கு சட்டத்தரணிகளும்இ பிறப்புஇ இறப்புஇ திருமணச் சான்றிதழ் வழங்கல் தொடா;டபாக யாழ்.மாவட்ட செயலக உதவிப் பதிவாளா;இ மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தா;களும் இச் சட்ட முகாமில் கலந்து சட்ட சேவைகளை வழங்கினா;. இதன்போது நெடுந்தீவூப் பிரதேசத்தின் துஃ03இ துஃ04இ துஃ05இ துஃ06 கிராமசேவகா; பிரிவிலுள்ள மக்களுக்காக இச் சேவைகளை வழங்கின. இதன் போது 19 பேரிற்கு அடையாள அட்டைகள்இ 19 பேரிற்கு பிறப்புச் சான்றிதழ்இ  5 பேரிற்கு திருமணச் சான்றிதழ்இ 4 பேரிற்கு இறப்புப் பதிவூகளும் மேற்கொள்வதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஓh; இளம் தம்பதியினருக்கு உடனடியான திருமணப் பதிவூம் அப்போது இடம் பெற்றது. இச் சேவையில் திருப்தியடைந்த மக்கள் மேலும் இவ்வாறான தேவைகள் உள்ளவா;கள் இருப்பதாகவூம்இ தொடா;ந்தும் இச் சேவையை ஒழுங்குபடுத்துமாறும் மகளிh; அபிவிருத்தி நிலையத்தினரிடம் கேட்டுள்ளனா;. இதனைத் தொடா;ந்து மேலும் இரு கிராம சேவையாளா; பிரிவூக்கும் இலவச சட்ட சேவை முகாம் ஒன்றை நடத்துவதற்கும்இ ஒழுங்கு செய்யப்பட்ட 40 பெண்களை உள்ளடக்கிய நான்கு மகளிh; குழுக்களுக்கும்இ பெண் தலைமைத்துவப் பயிற்சியையூம் வழங்குவதற்கு மகளிh; அபவிருத்தி நிலையம் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. இச் சேவை ஒழுங்காக நடைபெறுவதை மேலும் 6 மாதங்களுக்குத் தொடா;ந்து மகளிh; அபிவிருத்த நிலையம் கண்காணிப்பை மேற்கொள்ளவூள்ளது. கண்காணிப்பு செய்யப்பட்ட அபிவிருத்தி தொடா;பான முன்னேற்ற அறிக்ககைள் ஐ.நா அபிவிருத்தித் திட்டத்தினருக்கும்இ மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
நெடுந்தீவூக் கடற்பிரயாண வசதிகள் கஸ்டம் நிறைந்த ஒன்றாக இருந்த போதிலும் இப் பிரதேசத்தின் தேவை கருதி யாழ்.குடாநாட்டிலிருந்து பல வளவாளா;கள் சிரமத்தையூம் பாராமல் வருகை தந்து தமது சேவையை ஆற்றியமை வரவேற்கத்தக்கது.
பெண்கள் எக்கோணத்திலிருப்பினும் அவா;களுக்கான சேவையினை மகளிh; அபிவிருத்தி நிலையம் தொட்டுச் செல்லும் என்பதனை நெடுந்தீவின் செயற்பாடுகள் உறுதிப்படுத்தி நிற்கின்றன.

Grama Nilathari Officers in Sri Lanka

Posted on


There are 14,122 Grama sevaka officers employed in Sri Lanka attached to 332 Divisional secretariats all our Sri Lanka

Exhibition

Posted on

Exhibition on 30th Sep – Oct 1st 2011 at Jaffna

This exhibition was conducted by the Centre for Women and Development and Women entrepreneurs exhibited this event in Saraswathi Hall, Jaffna.
The focus of this event is to identify the best marketing avenues for the local products such as hand woven product using Palmyra leaves and products made by women.
The program was very successful. We are planing to conduct such programs in an yearly manner in the future.

School Programs

Posted on

School Program

ஒழுங்கான சமுதாயத்தின் வழிகாட்டிகள் மாணவர்கர்களே

இளம் சமுதாயத்தினர் சரியாக வழிநடத்தப்படவில்லை துன்பங்கள், தொல்லைகள் நிறைந்த சமுதாயமாக எமது சமுதாயம் மாறி வருகின்றது. இப்படியெல்லாம் குற்றச் சாட்டுக்கள் பல கோணங்களிலும் வந்து சேர்கின்றன. இதற்கெல்லாம் மாயவர்கள் தான் காரணம் என்பது முடிவல்ல. எது எப்படி இருந்த போதிலும் பருவத்தின் தேவைகள் பாலியல் சேஸ்டைகளாக உருவெடுத்து அதன் விளைவாக ப் பாதிக்கப்படும் இளம் பெண்களின் நிலை  இன்று எல்லோர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதற்கான ஓர் வழிகாட்டலை எங்கே தொடங்கலாம் மாணவர்களின் எதிர்கால உயர் நோக்கை மையமாகக் கொண்டு பெண்கள் கூடுதலாகக் கல்வி பயிலும் பாடசாலைகளிலும், ஏனைய பாடசாலை மாணவ, மாணவியர்களை இணைத்தும் சில விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்துவது பயனுள்ளதாக அமையும். இவ்வாறான கருத்தரங்குகளை மகளிர் அபிவிருத்தி நிலையம் நடத்தி வருகின்றது.

இதன் மூலம்

  • மாணவர்களது பங்காற்றலை வளப்படுத்தல்
  • மாணவர்களது ஆளுமையை வலுப்படுத்தல்
  • சமூகம் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை உணர்த்துதல்
  • கல்வியில் மேம்பாடே மாணவர்களது எதிர்கால சக்தி என்பதை    உணர்த்துதல்
  • மாணவர்களது எதிர்கால தொழில் நடவடிக்கைகட்கு வழிகாட்டல்
  • ஆகியன மாணவர்கள் மத்தியில் வலுப்படுத்தப்படும் இது போன்ற கருத்தரங்குகள் மாணவர்களுக்கு மட்டுமன்றி பெற்றோர்களுக்கும், கிராமிய மட்டத்திலும், இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியிலும், நகர்புற மக்கள் மத்தியிலும்  நாம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.  இச் செயற்பாட்டினை வட மாகானத்திலுள்ள  கல்வி வலையங்களை உள்ளடக்கும் 104 பாடசாலைகளுக்கு நடத்துவதென தீர்மானித்துள்ளோம். இதில் கிளிநொச்சி, முல்லைத்தீவிலுள்ள பாடசாலைகளும் அடங்கும் . இக் கருத்தரங்கிற்கு அதெரிவு செய்யும் மாணவர்கள் தரம் 10ற்கு மேல் கல்வி பயிலும் மாணவர்களாவர். இது வரை பி்ன்வரும் பாடசாலைகளில் இக்கருத்தரங்குகள் நடைபெற்றுள்ளன.

  • யா.வைத்தீஸ்வரா கல்லூரி
  • யா.பெரியபுலம் மகா வித்தியாலயம்
  • யா.சென் சாள்ஸ் மகா வித்தியாலயம்
  • யா.கொக்குவில் இந்துக் கல்லூரி
  • யா.பண்டத்தரிப்பு யசிந்தா றோ.க.த.க பாடசாலை
  • யா.நாவாந்துறை றோ.க பாடசாலை
  • ஆகிய 6 பாடசாலைகளில் 2000 மாணவர்களுக்கு இவ்விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை நடத்தியுள்ளோம். இவ் விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பங்குபற்றிய மாணவர்களில் ஒவ்வொரு பாடசாலைகளிலும் 10 பேர் கொண்ட குழு தெரிவு செய்யப்பட்டு்ள்ளது. இக்குழுவில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது.

    இப் பாடசாலைகளில் கருத்தரங்கு நடத்துவதற்கு அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் முழு ஒத்துழைப்பையும் வழங்கியுள்ளனர். பெற்றோர்களும் இக் கருத்தரங்கிற்கு முழு ஆதரவை வழங்குகின்றனர். இக் கருத்தரங்கு மாணவர்களுக்காக சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டு சிறந்த வளவாளர்களைக் கொண்டு நடத்தப்படுகின்றது. வளவாளர்களில் மகப்பேற்று நிபுணர்கள், ஊடகவியலாளரகள்,  சட்டத்தரணிகள் பங்குபற்றி மாணவர்களை  நல்ல முறையில் வழிகாட்டுகின்றனார். இவ்வாறான கருத்தரங்குகள் எமது சமுதாயத்தின் இளைஞர்களை நல்வழி்ப்படுத்தி சிறந்த ஒரு சமூகத்தை உருவாக்கும் என நம்புகின்றோம். இததற்கு உங்கள் எல்லோரது ஒத்துழைப்பும் கிடைக்கும் என்பது எமது நம்பிக்கை
    தொடர்ந்தும் பாடசாலைகளில் விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

    Contact Us

    Posted on

    Contact Us

    Saroja Sivachandran M.A
    Director CWD
    [email protected]
    Address: No 7, Ratnam lane, K.K.S Road Jaffna.
    Phone:             +94 021 222 4398      , 021 222 9861