International women’s Day -2014 – Invitation

Posted on

புதுக்குடியிருப்பில் நான்கு வருடங்களின் பின் முதன்முதலாக கொண்டாடப்பட்ட சர்வதேச மகளிர் தினம்-2014
போரினால் பாதிப்புற்ற வன்னிப் பிரதேசம். அப்பிரதேச வாழ் மக்கள் அவர்களோடு மகளிர் அபிவிருத்தி நிலையம் பல பணிகளில் ஈடுபட்டுவரும் அதே நேரத்தில் 2014.மார்ச்.2014 அன்று சர்வதேச மகளிர் தினத்தை புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் மண்டபத்தில் நடத்தி எல்லோரதும் பாராட்டையும் பெற்றுள்ளது. போர் முடிவடைந்து நான்கு வருடங்களின் பின் தமது பிரதேசத்தில் மகளிர் தினம் கொண்டாடப்படுவதையிட்டு அப்பிரதேச வாழ் பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிகழ்வு மகளிர் அபிவிருத்தி நிலைய பணிப்பாளர் திருமதி. சரோஜா சிவச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. புதுக்குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பெண்கள் மற்றும் மகளிர் குழுக்களின் தலைவிகள் உட்பட 250ற்கு மேற்பட்ட பெண்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு தங்களுக்காகவே நடாத்தப்படுகின்றது என்ற நிலையில் மிகவும் உற்சாகமாக இந்நிகழ்வை சிறப்பாக நடாத்தி முடிப்பதில் ஆர்வம் காட்டினர்.
பெண்கள் ஒவ்வொருவரும் தம்மில் புதைந்திருந்த சோகங்களை வெளிக்காட்டாது நிகழ்வில் கலகலப்பாக கலந்து கொண்டமை நிகழ்வை சிறப்படைய வைத்தது. மகளிர் தின நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண சபை முல்லைத்தீவு மாவட்ட உறுப்பினர் திருமதி.மேரிகமலா குணசீலன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் சார்பாக நிர்வாக உத்தியோகத்தர் திரு.எஸ்.சிவதாஸ் , முஃகைவேலிகணேச வித்தியாலய அதிபர் திருமதி. சிவராணி தங்கமயில் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி. குகணேசதாசன் சரோஜா அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இத்துடன் இந்நிகழ்வில் தென்னிலங்கையில்; இருந்து வருகை தந்திருந்த அன்னையரும் புதல்வியரும் நிறுவனம் சார்பாக திருமதி. டல்சி ,திருமதி.தயா அவர்களும் கலந்துகொண்டார்.
மகளிர் தின நிகழ்வு வரவேற்பு நடனத்தோடு ஆரம்பமாகி பிரதான பேச்சாளர்களின் கருத்துரைகளோடு பங்குபற்றியவர்களின் தேவைகள் கருத்துக்கள் என்பனவும் இந்நிகழ்வில் கலந்துரையாடப்பட்டது. இந்நிகழ்வின் இறுதியில் ‘போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் குரல்’ என்ற தலைப்பில் ஆறு அம்சங்கள் அடங்கிய மகஜர் ஒன்று வடமாகாண சபை முல்லைத்தீவுமாவட்ட உறுப்பினர் திருமதி. மேரிகமலா , புதுக்குடியிருப்பு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. இத்துடன் பங்குபற்றிய பெண்களில் பத்துப் பெண்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் தலா ரூபா 5000ஃஸ்ரீ படி வாழ்வாதார உதவியாக வழங்கப்பட்டது. பங்குபற்றியவர்களின் கலை நிகழ்வுகளோடு மகளிர் தின நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
 

Leave a Reply